இலங்கையில் பதற்றம்! சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முற்றாக முடக்கம்


இலங்கையில் நீர்கொழும்பு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.முச்சக்கரவண்டி சாரதிகளின் குழுக்களுக்கு இடையிலான முறுகல் நிலை வன்முறையாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் இந்த வன்முறை சம்பவத்தை ஆரம்பித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் பகுதியில் பெருமளவு முஸ்லிம்கள் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த வன்முறை சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீர்கொழும்பு பகுதியில் நாளை காலை வரையில் பொலிஸ் ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. மேலும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்