ரணிலிடம் இருந்து மைத்திரிக்கு சென்ற பேரிடியான தகவல்?சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தொடர்ந்தும் மறுத்தால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்க ஐ.தே.க தயாராகி வருகிறது.

சரத் பொன்சேகாவிடம் சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்கும்படி வலியுறுத்தி ஐ.தே.கவின் 100 எம்.பிக்களின் கையொப்பம் திரட்டப்படுகிறது. அதை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளனர்.

கணிசமான எம்.பிக்களின் அப்பிராயத்தை கணக்கிலெடுக்காமல் விட்டு, பொன்சேகாவிற்கு தொடர்ந்தும் சட்டம் ஒழுங்கு அமைச்சை கையளிக்க மைத்திரி மறுத்தால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பது பற்றியும் ஐ.தே.க தரப்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

மைத்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காவிட்டாலும், முக்கிய தருணத்தில் கூட்டு எதிரணி ஆதரிக்கும் என ஐ.தே.க கருதுகிறது.

இந்த சம்பவம் மைத்திரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்