ஐபோன்களுக்கு வரும் அழைப்புகளுக்கு ஆப்பிள் கணினிகளில் பதிலளிப்பது எப்படி?


தற்போது கைப்பேசிகள், டேப்லட்கள், மடிக்கணினிகள் என வெவ்வேறு சாதனங்களை ஒவ்வொருவரும் பயன்படுத்துகின்றனர்.
இவற்றினை தனித்தனியாக பயன்படுத்துவதிலும் பார்க்க ஒவ்வொன்றினையும் ஒரே இடத்திலிருந்து கட்டுப்படுத்துவதை பயனர்கள் விரும்புவார்கள்.
இதற்கிணங்க ஒருவர் ஆப்பிள் கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது அவரது ஐபோனிற்கு வரும் அழைப்பினை ஆப்பிள் கணினியிலேயே ஏற்று பதிலளிக்கும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனை செயற்படுத்துவதற்கு இரு சாதனங்களிலும் ஒரே ஐகிளவுட் ஐடி சைன் இன் செய்திருத்தல் வேண்டும்.
தவிர ஐபோன் எனின் iOS 8.1 அல்லது அதன் பின்னரான இயங்குதளத்தினையும், ஆப்பிள் கணினிகள் macOS Yosemite அல்லது அதன் பின்னரான இயங்குதளத்தினையும் கொண்டிருப்பதுடன் இரு சாதனங்களும் ஒரே வைபை இணைப்பில் இருக்க வேண்டும்.
தற்போது ஐபோனில் Phone எனும் பகுதிக்கு சென்று Calls on Other Devices எனும் பகுதியில் Allow Calls on Other Devices என்பதை Enable செய்வதுடன், Allow Calls On என்பதில் ஆப்பிள் கணினியையும் Allow செய்ய வேண்டும்.
அதன் பின் ஆப்பிள் கணினியில் FaceTime அப்பிளிக்கேஷனில் சைன் இன் செய்து preferences பகுதியில் Calls from iPhone என்பதில் சரி அடையாளம் இட வேண்டும்.
இப்போது ஐபோன் மற்றும் ஆப்பிள் கணினி என்பன இணைக்கப்பட்டுவிடும்.
அதன் பின்னர் ஐபோனிற்கு வரும் தொலைபேசி அழைப்புக்களை ஆப்பிள் கணினியில் பெற முடிவதுடன் பதிலளிக்கவும் முடியும்.கருத்துரையிடுக

0 கருத்துகள்