அதிசிறந்த புத்திசாலியான குண்டுதாரி ஹஸ்துன் யார்? குண்டுகளை எப்படி தயாரித்தார்? வெளிவந்த பல தகவல்கள்


நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாரியான அச்சிமொஹம்மது மொஹம்மது ஹஸ்துன் என்பவரே இந்த குண்டுகளை தயாரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு சில விடயங்களை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குத் தேவையான குண்டுகளை, கட்டுவாபிட்டிய செபஸ்தியர் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய அச்சிமொஹம்மது மொஹம்மது ஹஸ்துன் என்பவரே தயாரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் இணையத்தளத்தினூடான தகவல்களைக் கொண்டே இந்த குண்டுகளை தயாரித்ததாகவும் பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் குண்டுகளைத் தயாரிப்பதற்காக, வெடிபொருட்களைப் போன்று, யூரியா, வோட்டர் ஜெல் உள்ளிட்ட இரசாயனப் பதார்த்தங்கள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர், களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தவர் என்றும், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் அதிவிசேட (ஏ-9) புள்ளிகளைப் பெற்றவர்.

காத்தான்குடியில் அமைந்துள்ள அரபிப் பாடசாலையில் இணைந்து உயர் கல்வியை கற்கச் சென்ற காலத்திலேயே, பிரிவினைவாதச் சக்திகளுடன் இணைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்