அழிவின் விளிம்பில் மனித இனம்! இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளது? அதிர்ச்சியளிக்கும் ஐநா அறிக்கை


மனிதர்கள் செய்துவரும் பல்வேறு விஷயங்கள் உலகத்தின் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம். தற்போது கோடையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதற்கும் மனிதர்கள் தான் காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

வெப்பநிலை மாற்றத்தால் பணிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்வதும் மற்றொரு புறம் நடந்து வருகிறது.

இப்படி மனிதர்கள் செய்யும் சுரண்டல்களால் விரைவில் மனித இனமே அழியும் என ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

50 நாடுகளை சேர்ந்த 145 சூழலிய ஆய்வாளர்கள் ஜக்கிய நாடுகள் கூட்டமைப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததனர்.

அந்த ஆய்வு முடிவுகள் நாம் உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதாக சொல்கிறது. அதாவது இப்போது நடைபெறும் இயற்கை சுரண்டல் தொடருமேயானால் இன்னும் 150 ஆண்டுகளில் சுமார் 75% உயிரினங்கள் அழிந்துவிடும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கு முன்பு 5 முறை பேரழிவும் நடந்துள்ளது. அதற்கு எரிமலை, விண்கல், பனி உள்ளிட்ட விஷயங்கள் தான் காரணம். ஆனால் தற்போது மனிதர்களால் தான் அடுத்த பேரழிவு நடைபெறும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்