டோனியின் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளது! இந்திய சுழற்பந்து வீச்சாளர்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் முடிவுகள் பலமுறை தவறாகியுள்ளதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

டோனி களத்தில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதமும், அவர் எடுக்கும் பல வித்தியாசமான முடிவுகளும் பெரும்பாலும் வெற்றியை பெற்றுத் தரும். அதற்காகவே டோனியை அவரது ரசிகர்களும், பல்வேறு முன்னணி மற்றும் முன்னாள் வீரர்களும் புகழ்ந்துள்ளனர்.

அத்துடன் எதிரணி வீரர்களின் செயல்பாடுகளையும் டோனி கணிக்கக்கூடியவர் என்றும் பலர் பாராட்டி வருகின்றனர். எனினும் சில நேரங்களில் அவரது முடிவுகள் தவறும். இதுதொடர்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கேட்கப்பட்டது.

இந்நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு டோனி அறிவுரை கூறுவது குறித்து குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பலமுறை டோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால், அவரிடம் அதை கூற முடியாது.

அவர் ஏதாவது வீணாக பேசிக்கொண்டு இருக்க மாட்டார். மிக குறைவாகத்தான் பேசுவார். ஏதாவது சில குறிப்புகள் வழங்க வேண்டும் என அவர் எண்ணினால் மட்டுமே வந்து பேசுவார்’ என தெரிவித்துள்ளார்.

குல்தீப் யாதவ்வின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், அவர் இதனை நகைச்சுவையாக தான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்