கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுகின்றாரா ராகுல் காந்தி? சூடுபிடிக்கும் இந்திய அரசியல் களம்


இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் 345 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.

அத்துடன், தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

இதனால் ஆட்சி அமைக்க முடியாத சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், கட்சி காரிய குழு அது குறித்து முடிவெடுக்கும் என்று கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இந்திய அரசியல் களம் பெரும் பரபரப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்