விமான நிலைய கட்டுப்பாடுகள் தளர்த்தம்! நுழைவாயில் வரை வாகனங்கள் செல்லலாம்


இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை அடுத்து கட்டுநாக்க விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து வெளியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கமைய, நேற்றிரவு முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இனி வழமை போல், பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்