அமெரிக்க அரசாங்கத்தால் Huawei மீதான தடை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கம்!


அமெரிக்க அரசாங்கம், சீனாவின் Huawei நிறுவனத்தின் மீது விதித்த சில தடை உத்தரவுகளைத் தளர்த்தியுள்ளது.

குறித்த தடை உத்தரவுகள், மிகப் பெரிய, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தினால், அந்தத் தடை உத்தரவுகள் 90 நாட்களுக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, Huawei தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து அமெரிக்காவில் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கி, தமது கட்டமைப்புகளை நிர்வகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது சந்தையில் உள்ள Huawei சாதனங்களுக்குத் தேவையான மென்பொருள் கட்டமைப்பு வசதிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனினும், Huawei நிறுவனம், புதிய சாதனங்களை உற்பத்தி செய்வதற்காக, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்