13 பேருடன் இந்திய விமானம் மாயம்...! முதல் கட்ட தகவல் வெளியீடு


13பேருடன் பயணித்த இந்திய விமானப்படையின் AN-32 விமானம் காணாமல் போனதை அடுத்த மதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசாமின் ஜோர்கத் பகுதியில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு சென்ற விமானம் காணாமல் போனது.

இந்நிலையில், விமானம் பகல் 1 மணி முதல் காணவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது. ரோடாரில் கட்டுபாட்டை இழந்த விமானம் என்ன ஆனாது என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விமானம் மலைபகுதிகளில் இராணுவ சேவைக்காக பயன்படுத்தப்படும் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன AN-32 ரக விமானத்தை தேடும் பணியில், சுகோய் 30 மற்றும், சி 130 ரக சிறப்பு தேடுதல் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

சீன எல்லையையொட்டியுள்ள, அருணாசல பிரதேச வான்பகுதியில் பறந்த போது விமானம் மாயமானதாக, முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்