13 பேருடன் மாயமான இந்திய போர் விமானம் கண்டுபிடிப்பு


13 பேருடன் மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த யூன் 3ம் திகதி அசாமின் ஜோர்கத் பகுதியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் காணாமல் போனது.

இந்த விமானத்தில் 8 விமானக்குழுவினர், 5 இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. எனினும், விமானம் குறித்த தகவல் கிடைக்காத நிலையில், தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாயமான விமானத்தை தேடும் பணி 8வது நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில், அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே 13பேருடன் காணாமல்போன இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே இச்செய்தி சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படையினர், இது குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்