நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 2 மணி நேரத்தில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை!


நியூசிலாந்து கடற்கரையில் உள்ள கெர்மடெக் தீவு பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி தாக்குதல் இருக்கலாம் என அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெர்மடெக் தீவு பகுதிக்கு அருகே ஆக்லாந்து மற்றும் டோங்கா இடையே உள்ள நடுப்பகுதியில், உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 என் பதிவாகியிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூகம்பம் நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள பசிபிக் பகுதிகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் மிகவும் அவசரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தீவு பகுதியில் சுனாமி தாக்குதல் நடந்தால், அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் நியூசிலாந்திற்கு வந்தடையும் என சிவில் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் ஜிஎன்எஸ் அறிவியல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கெர்மடெக் தீவானது நியூசிலாந்தின் வடக்கு கடற்கரையிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நியூசிலாந்திற்கும் டோங்கோவிற்கும் இடையில் எல் எஸ்பெரன்ஸ் பாறையிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்