இந்திய அணிக்கு விழுந்த பயங்கர அடி... முக்கிய வீரர் திடீர் விலகல்!


இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகார் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளை வென்று இந்திய அணி பலத்துடன் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் ரோகித்சர்மா எப்படி பார்மிற்கு திரும்பினாரோ, அதே போன்று அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் ஷிகார் தவான் சதமடித்து பார்மிற்கு திரும்பினார்.

இதனால் இந்திய அணி வலுவான துவக்க வீரர்களை கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்தணி பெருத்த அடியாக ஷிகார் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

3 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயயரோ அல்லது ரிஷப் பாண்ட் இருவரில் ஒருவரை எடுக்க இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்