நியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்


நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15ம் திகதியன்று நடத்தப்ட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்ததோடு, ஏராளமான அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

உலகநாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ப்ரெண்டான் ஹாரிசன் டாரன்ட் (28) என்கிற அவுஸ்திரேலிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டது. இதனை அந்நாட்டு முஸ்லீம் மக்கள் பெரிதும் வரவேற்றனர்.

இந்த நிலையில் வழக்கின் மூன்றாவது விசாரணை இன்று நடைபெற்றது. குற்றவாளி ப்ரெண்டான், பலத்த பாதுகாப்புகளுடன் கூடிய ஆக்லாந்து சிறையில் இருந்து வீடியோ மூலம் தோன்றினார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது ப்ரெண்டான் சிரித்தபடியே, தன் மீது சுமத்தப்பட்ட 51 கொலை, 40 கொலை முயற்சி மற்றும் ஒரு பயங்கரவாத வழக்கு உள்ளிட்ட குற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனை கேட்டதும், நீதிமன்றத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழ ஆரம்பித்துள்ளனர். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் வழக்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி ஆகஸ்டு 16ம் திகதிக்கு மாற்றி வைத்து உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்