உலக நாடுகளின் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட இலங்கை! காரணம் தெரியுமா?


உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

கடந்த ஆண்டு 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இவ்வாண்டு 5 இடங்கள் பின்நோக்கிச் சென்று 72 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த ஆண்டும் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அண்டை நாடான இந்தியா இந்தப் பட்டியலில் 141 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

163 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.

மேலும் பூட்டான் 15-ஆவது இடத்தைப் பிடித்து, தெற்காசிய நாடுகளில் அமைதி மிகுந்த நாடாக உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்