பஞ்சாபிலும் தமிழ் பரவுவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்டியுள்ளார்.முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில், 9 பேர் கொண்ட குழு தேசிய கல்விக் கொள்கை குறித்து நிறைய பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்த பரிந்துரைகளை வரைவு அறிக்கையாக , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருந்தார்.

484 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கையில், 'இந்தி மொழியைக் கட்டாயாமாக்கவேண்டும். 6-8 வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும்’
என்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த அறிக்கை, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளான மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அதனையடுத்து, #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பஞ்சாபிலும் தமிழ் பரவுவதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் மரியான் பட பாடலை பஞ்சாபி ஒருவர் பாடும் வீடியோவையும் இணைத்துள்ளார்.


இதைப்பார்த்த நெட்டிசன்கள் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு வலுக்கும் நிலையில் சரியான டைமிங் தலைவா என்று ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்