ஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்... பேரதிர்ச்சியில் தேமுதிகவினர்!


வாங்கிய கடனை கட்டாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறவித்துள்ளது. இதனால் விஜயகாந்தின் சாலி கிராம வீடு, மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5 கோடி 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் கடன் பாக்கி உள்ளது. இதற்கான வட்டி மற்றும் இதர பாக்கிகள் ஆகியவற்றை செலுத்தாததால் அவரது சொத்துக்களை ஏலத்துக்குவிட இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதற்காக கடனீட்டு சொத்துக்கள் மீதான உரிமை அமலாக்க சட்டம் 2002ன் படி இ-ஏல விற்பனை அறிவிப்பினையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

5.5 கோடி கடன் தொகை
இது தொடர்பாக நாளிதழ்களில் இன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 கோடி 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். இதற்கான வட்டி, இதர செலவுகளை வசூலிப்பதற்காக கீழ்கண்ட சொத்துக்களை உள்ள இடத்தில் உள்ளவாறு மற்றும் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே என்ற அடிப்படையில் 26.07.2019 அன்று விற்பனை செய்யப்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கும் மற்றும் குறிப்பிட்ட கடன்தாரர்கள் மற்றும் ஜாமீன் தாரர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.

விஜயகாந்த் பெயர்
இதன்படி கடன்தார்கள் பெயர் மற்றும் முகவரி: ஸ்ரீ ஆண்டாள் அழகரி எஜிகேசனல் டிரெஸ்ட் அலுவலகம், ஜிஎஸ்டி ரோடு மாமண்டூர் கிராமம் மதுராந்தகம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம். மற்றும் 12ஏ, கண்ண்ம்பாள தெரு கண்ணபிரான் காலணி, சாலிகிராமம், சென்னை. ஜாமீன்தாரர்கள் பெயர் மற்றும் முகவரி, விஜகாந்த் மற்றும் பிரேமலதா, இருவரது வீட்டு முகவரி 54, கண்ணம்மாள் தெரு, கண்ணபிரான் காலனி சாலி கிராமம் சென்னை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலி கிராம வீடு
இதில் விஜயகாந்தின் சாலி கிராம வீடு 3013 சதுரஅடி சொத்து என்றும், மற்றும் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி 4லட்சத்து 38 ஆயிரத்து 956 சதுர அடி சொத்து என்றும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆண்டாள் அழகர் கல்லூரி
மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு குறைந்தபட்ச கேட்பு விலையாக 92 கோடியோ 5லட்சத்து 5 ஆயிரத்து 51 ரூபாயாகவும், சாலிகிராமம் வீட்டுக்கு குறைந்த பட்ச கேட்பு தொகையாக 3 கோடியே 4லட்சத்து 34 ஆயிரத்து 344 ரூபாய் ஆகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதேபோல் மற்றொரு சொத்தான சாலி கிராமம் வேதவள்ளி தெருவில் உள்ள 4651 சதுர அடி குடியிருப்புக்க 4 கோடியே 25லட்சத்து 84 ஆயிரத்து 849 ரூபாய் ஆக குறைந்த பட்ச கேட்பு தொகையை வங்கி நிர்ணயித்துள்ளது.

ஒய்வில் விஜயகாந்த்
இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளதாக வங்கி வெளியிட்ட நாளிதழ் விளம்பரத்தை பார்த்து தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்த், பொதுவெளியில் தொண்டர்களை சந்திப்பது இல்லை. அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். விரைவில் இது தொடர்பாக விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்