மீண்டும் சாகும்வரை போராட்டத்தில் குதித்த தேரர்கள்! விரைந்துசெல்லும் பெருமளவு சிங்களவர்கள்!


பதவி நீங்கிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி நான்கு தேரர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்திலுள்ள விகாரை ஒன்றிலேயே அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் பதவி விலகிய ரிஷாட் பதியுதீனை உடனடியாக கைதுசெய்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும்வரை தாம் இந்த போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

தேரர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெருமளவு சிங்களவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி தலதா மாளிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் ஆரம்பித்த உண்ணா நிலைப்போராட்டம் நேற்றைய தினம் முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து நான்கு தேரர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடக்கியுள்ளனர்.

இது தென்னிலங்கையில் மீண்டும் பரபரப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்