பேரழிவு...! பிரித்தானியா தலைநகருக்கு டிரம்ப் எச்சரிக்கை


பிரித்தானியா தலைநகர் லண்டனின் நிலை மிக மோசமாகிவிடும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன் நகரில் கடந்த 20 மணிநேரத்தில் 2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ள நிலையில் யாரும் உயிரிழக்கவில்லை. வாண்ட்ஸ்வொர்த் மற்றும் டவர் ஹேம்லெட்டுகள் பகுதிகளிலே இத்தாக்குல் சம்பவங்கள் நடந்துள்ளது.

லண்டன் மேயராக சாதிக் கான் பதவி வகித்து வரும் நிலையில், சமீபத்தில், பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், லண்டன் மேயர் சாதிக் கானை கடுமையாக சாடினார்.

இந்நிலையில் லண்டனில் இடம்பெற்றுள்ள தொடர் தாக்குதல் சம்பவம் குறித்து டிரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவத்துள்ளார். அதில், மிக விரைவில் லண்டனுக்கு புதிய மேயர் தேவை. சாதிக் கானால் லண்டனுக்கு பேரழிவு, இப்படியே போனால் நிலை மிக மோசமாகிவிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்