மகிந்த தரப்புக்கும் ‘செக்’ வைத்து மைத்திரியின் தடாலடி அறிவிப்பு!


எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த தரப்புக்கும் ஆதரவளிக்கப் போவதில்லையெனவும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை அமைச்சரவைக்கூட்டம் நடந்து முடிந்த பின்னர் சில அமைச்சர்களுடன் மனம் விட்டுப்பேசினார் ஜனாதிபதி மைத்திரி.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன். அதே சமயம் மகிந்த தரப்புக்கும் ஆதரவளிக்கமாட்டேன். ஐக்கிய தேசிய முன்னணி புதிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் முறையான அரசியல் வேலைத் திட்டத்தை முன்வைத்தால் ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பேன். இல்லாவிடின் நடுநிலை வகிப்பேன் எனவும் அவர் தெரிவி த்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்