உங்க இஷ்டத்துக்கு விளையாட முடியாது! டிவில்லியர்ஸை நிராகரித்த தென்னாப்பிரிக்கா


உலகக்கிண்ணம் போட்டிகளில் டி வில்லியர்ஸ் விளையாட விரும்பியதாகவும், கிரிக்கெட் வாரியம் அவரை நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு சர்வதேச விளையாட்டு போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதைத்தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறும் உலகக் கிண்ணம் போட்டியில் அவர் விளையாட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உலகக்கிண்ணத்திற்கான தென்னாப்ரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, டிவில்லியர்ஸ் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டதாக தெரிகிறது.

டிவில்லியர்ஸ், அணித் தலைவர் டூ பிளஸ்ஸி, ஓடிஸ் கிப்சன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஆகியோரிடம் இதை பற்றி அவர் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அவரின் விருப்பத்தை நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், டிவில்லியர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இது தென்னாப்பிரிக்க அணியை உற்சாகப்படுத்த வேண்டிய காலம் என தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தின் முதல் மூன்று போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி தொடர் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்