இலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை! எங்களுக்கு தமிழ் வேண்டும்... வேதனை தெரிவித்த பிரபல நடிகர்


இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர்லைன்ஸில் தமிழில் அறிவிப்பு செய்யும் போது தமிழ்நாட்டில் இயங்கும் விமானத்தில் அது செய்யப்படுவதில்லை என நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ்.

அவர் இன்று தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் #SrilankanAirways ல் கூட தமிழில் அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டிற்குள் இயங்கும் எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதில்லை. வசதிக்காக மட்டும் அல்ல உரிமைக்காகவும் கேட்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதோடு #வேண்டும்தமிழ் #வேண்டிக்கேட்கும்தமிழர்கள் என்ற ஹேஷ் டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்