கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வோருக்கான மகிழ்ச்சியான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வௌியேறும் பிரிவுகளை மீண்டும் திறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின் இலங்கையின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பிரிவுகளுக்கான பிரவேசம் மட்டுப்படுத்தப்பட்டு, ஒரு பயணிக்கு இருவருடன் இந்த பிரிவுகளூடாக செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனால் வெளிநாடுகளுக்கு தொழில் மற்றும் கல்வி என்பவற்றின் நிமித்தம் உறவுகளை பிரிந்து செல்பவர்களை, சொந்தங்கள் வழியனுப்ப செல்ல முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னர் போன்றே மீண்டும் குறித்த பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளமையானது பயணிகளுக்கும், பயணிகளை வழயனுப்ப செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பாக அமையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்