நாளை விடியும் போது அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் செய்தி காத்திருக்கின்றது! பிரதமர் ரணில்


நாளை விடியும் போது அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் செய்தி காத்திருக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கை குறித்து சர்வதேச நாடுகளின் நம்பிக்கை வலுவிழந்துள்ளதாகத் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்ற காரணத்தினால் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், உட்கட்டுமான வசதிகளுக்காக வெளிநாட்டு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடுமையான கடன் சுமையில் சிக்கியிருந்த நிலையிலேயே நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை தமது தரப்பு ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் தற்பொழுது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாளை காலை ஆச்சரியமூட்டக்கூடிய ஓர் செய்தியை நீங்கள் கேள்வி படுவீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இலங்கை தொடர்பில் உலக நாடுகள் கொண்டுள்ள அபிப்பிராயம் தொடர்பில் புரிந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்