இலங்கையில் அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் பின்னணி! அரசாங்கம் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்சிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அரச புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலைமையில் இடம்பெற்ற சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அவர் இதனை உறுதி செய்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு தொடர்புபட்டுள்ளதாக பிழையான கருத்து உள்ளதெனவும், இந்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அது குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழ்ந்த ஐ.எஸ் அமைப்புடன் ஓரளவு தொடர்பில் இருந்த 20 வயதான இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பிற்கு அறிவித்துள்ளார்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள கூடிய சாட்சிகள் இல்லாமையினால், அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க ஐ.எஸ் அமைப்பு தயக்கம் காட்டியுள்ளது.
குறித்த இளைஞன் இந்தோனேஷிய இணையத்தளத்திற்கு இந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஐஎஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ செய்தி சேவையில் இந்த காணொளி வெளியிடப்பட்டு, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பகர் அல் பக்தாதிக்கு சென்றடைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினால் தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையில் தாக்குதல்கள் மேற்கொள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எந்தவொரு தேவையும் இருந்திருக்கவில்லை என குறித்த புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்