157 பேரின் உயிரை காவு வாங்கிய விமான விபத்து! விமானி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்


உலகை உலுக்கிய எத்தியோப்பியா விமான விபத்தில் சிக்கிய விமானத்தை இயக்கிய விமானிகள் போதுமான பயிற்சிகளை பெற்றார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தாண்டு மார்ச் மாதம் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், 8 விமான பணியாளர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

அதே போல கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.

புறப்பட்ட 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர்.

இந்த இரு விபத்தையும் ஏற்படுத்திய விமானத்தை தயாரித்த நிறுவனம் போயிங் விமான நிறுவனம்.

இந்நிலையில் இந்த நிறுவனம், பயணிகள் விமானத்தை இயக்கும் அளவுக்கு தங்கள் விமானிகளுக்கு சரியான பயிற்சியை கொடுத்ததா மற்றும் அவர்கள் போதுமான அனுபங்களை பெற்றார்களா என கேள்வி எழுந்துள்ளது.

அதாவது, அமெரிக்காவில் துணை விமானியாக இருக்க ஒருவர் குறைந்தபட்சம் 1500 மணிநேரம் விமானத்தை இயக்கியிருக்க வேண்டும், விமானியாக இருப்பதற்கும் இதே நடைமுறை தான்.

ஆனால் எத்தியோப்பியா விமானத்தில் இருந்த துணை விமானி மொத்தமே 361 மணி நேரமே விமான இயக்கத்தில் தன்னை தொடர்பு கொண்டுள்ளார். மேலும் கமர்ஷியல் விமானம் இயக்குவதற்கான உரிமத்தை விபத்து நடப்பதற்கு மூன்று மாதத்துக்கு முன்னர் தான் பெற்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இதனால் வெளிநாட்டு விமானிகள் சரியான பயிற்சிகள் மற்றும் அனுபவம் இல்லாமல் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறார்களா என்ற மிக பெரிய கேள்வி எழுந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்