298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்


கிழக்கு உக்ரைன் அருகே 298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மலேசியாவின் MH-17 விமானம் 298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட ரஷ்யாவின் Buk ஏவுகணை பயன்படுத்தப்பட்ட விவகாரம் அந்த பேரழிவு நடந்த காலகட்டத்திலேயே அம்பலமானது.

சம்பவம் நடந்த அன்றே அந்த ஏவுகணையை ஏவ பயன்படுத்தும் லாஞ்சர் ரஷ்யாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டதும்,

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் மீண்டும் ரஷ்யாவுக்கு கொண்டு வரப்பட்டதும் பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த படுகொலைக்கு யார் உத்தரவிட்டார்கள்? ஏன் அத்தனை அப்பாவி பொதுமக்களையும் பழிவாங்கினார்கள்? போன்ற கேள்விகளுக்கு, சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் விடை இல்லை.

இந்த நிலையிலேயே பல விருதுகள் பெற்றுள்ள பிரபல தனியார் விசாரணை நிறுவனம் ஒன்று, இந்த விவகாரம் தொடர்பில், அதன் பின்னணியை ஆராய்ந்துள்ளது.

ஏவுகணை தாக்குதலை அடுத்து விமானம் நொறுங்கி விழுந்த பகுதியானது மிகவும் கொடூரமாக காட்சியளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிலரது உடல்கள் கிட்டத்தட்ட அழகிய நிலையிலேயே காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி எஞ்சிய உடல்கள் சிதைக்கப்பட்டு கிடந்துள்ளன.

விமானம் ஏவுகணை தாக்குதலில் சிதைந்த நிலையில், சடலங்கள் நிர்வாணமாக பதிந்துள்ளன. இதில் பல காரணங்களும் நிபுணர்களால் முன்வைக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சடலம் ஒன்று அப்பகுதியில் உள்ள சாலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டதாகவும்,

அது ஒரு இளைஞரின் சடலம் எனவும், அந்த சடலம் முழு நிர்வாணமாக இருந்துள்ளது எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல சடலங்களும் அலங்கார பொம்மைகள் போன்றே பேரமைதியாக காணப்பட்டதாகவும், ஆனால் எஞ்சிய சடலங்கள் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஏவுகணை லாஞ்சர் தற்போதும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனவா? அல்லது அதை சிதைத்து மறு உருவாக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வியையும் விசாரணை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த விமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்