இறுதிப்போட்டியில் இலங்கை நடுவர் செய்த சதி.. விதிமீறலால் கைமாறிய உலகக் கோப்பை


உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் களநடுவர் ஐசிசி-யின் விதியை மீறி செயல்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஓவரின் கடைசி 3 பந்தில் இங்கிலாந்துக்கு 9 ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில், களதடுப்பில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர் கப்தில், வீசிய பந்து, 2வது ஓட்டம் எடுக்க ஓடிய பென் ஸ்டோக்ஸ் துடுப்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றதால், இலங்கையை சேர்ந்த களநடுவர் குமார் தர்மசேனா, இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கினார்.

ஆனால் ஐசிசி-யின் 19.8 விதி படி, ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லும் சமயங்களில் கடைசி ஓட்டங்கள் எடுப்பதை கணக்கில் கொள்ள கூடாது.

அதாவது ஸ்டோக்ஸ் ஓடிய இரண்டாவது ஓட்டத்தை கணக்கில் கொள்ள கூடாது. இதனால் முதல் ஓட்டம் மற்றும் பவுண்டரி இரண்டு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். அதாவது 6 ஓட்டங்களுக்கு பதில் 5 ஓட்டங்கள் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இப்படி சரியாக விதிப்படி 5 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து இருந்தால் இங்கிலாந்து 1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கும். ஆனால் நடுவர்கள் செய்த தவறு போட்டி முடிவை தேவையில்லாமல் மாற்றி உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்