இலங்கைக்கு வந்து செல்லும் மர்ம விமானம்! வெளியான அதிர்ச்சித் தகவல்


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம விமானம் ஒன்று வந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த விமானம் முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ளதுடன், அதில் எந்தவொரு பெயரும் காணப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விமானம் எந்த நாட்டுக்கு சொந்தமானது? எந்த விமான சேவைக்கு சொந்தமானது? என்ன காரணத்திற்காக இலங்கை வந்தது? அந்த விமானத்தில் வந்தவர்கள் யார்? அவர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் மர்மமாகவே உள்ளது.

குறித்த விமானத்தில் N513SN என மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.


இந்த அமெரிக்காவின் விமானமாக இருக்கலாம் எனவும், இலங்கை அமெரிக்காவின் கொலனியாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த விமானம் செல்வதான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்