பிரித்தானியா போர்கப்பலுக்கும் ஈரான் படைக்கும் இடையில் என்ன நடந்தது? ஈரான் வெளியிட்ட புதிய வீடியோ


பிரித்தானியா-ஈரான் இடையே டேங்கர் பிரச்சினை மோசமாகி வரும் நிலையில், பிரித்தானியா போர்கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்த வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.

ஈரானியன் இராணுவத்தின் ஒரு அங்கமான புரட்சிகர படை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் வீரர்கள் பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் மாண்ட்ரோஸ் போர் கப்பலை எச்சரிக்கும் காட்சியை அதில் காண முடிகிறது.


யூலை 19ம் தேதி பிரித்தானியாவின் எண்ணெய் கப்பலான ஸ்டெனா இம்பீரோவை கைப்பற்ற அன்று குறித்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தன்று, ஈரானிய படைகள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டருடன் பிரித்தானியா எண்ணெய் கப்பலில் ஏறிக்கொண்டிருந்தபோது, எச்.எம்.எஸ் மாண்ட்ரோஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

உடனே, பிரித்தானியா போர் கப்பலை வழிமறித்த, ஈரான் படையினர், அதன் பணியில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் பிரித்தானியாவின் எண்ணெய் கப்பலான ஸ்டெனா இம்பீரோவை கைப்பற்றும் வீடியோவையும் ஈரான் வெளியிட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்