யாழ்ப்பாணத்துக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்; என்ன மாற்றங்கள் தெரியுமா?


யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதுடன் தென்னிந்திய நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விமான சேவையை விஸ்தரிக்கும் சர்வதேச தளமாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான நிலைய விஸ்தரிப்புக்காக செலவிடப்படவுள்ள தொகையானது சுற்றுலாத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொகையின் அரைப் பங்காகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த திட்டத்திற்கென 2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக கையாளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிவில் விமானங்களை நடத்திவரும் அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பலாலி விமான நிலையம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய அபிவிருத்திக்காக 1050 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இத்தொகையில் 900 மில்லியன் ரூபா இலங்கை சிவில் விமான அதிகாரசபை நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. இந்த புதிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பெருந்தொகை வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய விமான நிலையமாக மட்டுமன்றி சர்வதேச விமானங்களை கையாளக்கூடிய நிலையமாக அதாவது தென்னிந்தியாவை உள்ள நகரங்களை உள்ளடக்கிய வகையில் விமான சேவைகளை மேற்கொள்ளக்கூடிய நிலையமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நடுத்தர அளவிலான A 320 மற்றும் B 737 விமானங்களை கையாளக்கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்று அந்த இணையத்தளத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்