விடைபெற்றார் ராகுல்..! தலைவர் பதவி ராஜினாமா: காங்கிரஸ்க்கு இடைக்கால தலைவர் நியமனம்


காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமையிடம் வழங்கினார். விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி பதவி விலகியதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாவது, காங்கிரஸ் தலைவராக பதவி வகித்ததிற்கு மிகவும் பெருமைபடுகிறேன். 2019 தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த நான் தான் பொறுப்புஎங்கள் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு பொறுப்புடைமை முக்கியமானது. இந்த காரணத்தினால்தான் நான் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

புதிய தலைவரை கட்சி மேலும் தாமதமின்றி முடிவு செய்ய வேண்டும், நான் இந்த செயல்பாட்டில் பங்கேற்க மாட்டேன். ஏற்கனவே எனது ராஜினாமாவை சமர்ப்பித்துவிட்டேன், நான் இனி கட்சித் தலைவர் இல்லை. காங்கிரஸ் செயற்குழு ஒரு கூட்டத்தை விரைவாகக் கூட்டி முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்