வடபகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


யாழ்ப்பாணத்துக்கும் - கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும் ரயில் சேவை நான்கிலிருந்து ஆறாக நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இரவு தபால் ரயில் சேவையில் நேரமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது தினமும் காலை 6.10 மணிக்கு உத்தரதேவி நகர்சேர் கடுகதியும் அதன்பின் காலை 9.35 யாழ்தேவியும் பிற்பகல் 1.45 மணிக்கு குளிரூட்டப்பட்ட அதிசொகுசு நகர்நேர் கடுகதியும் இரவு 7 மணிக்கு தபால் ரயில் சேவையும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து இறக்கப்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ள நிலையில் உத்தரதேவி ரயில் சேவைக்கு அடுத்ததாக

புதிய ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்லவுள்ளது.

பிற்பகல் 1.45 மணிக்கு இடம்பெறும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதிக்கு பின்னா் மாலை 5.45 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு மற்றுமொரு புதிய ரயில் சேவையும் ஈடுபடவுள்ளது.

இரவு தபால் ரயில் சேவை நாளை முதல் காங்கேசன்துறையிலிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 இற்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து கொழும்புக்கு புறப்படவுள்ளது.

கொழும்பிலிருந்து புறப்படும் இரவு தபால் சேவை இரவு 9 மணிக்கு யாழ்.நோக்கி புறப்படவுள்ளது. தற்போது இரவு தபால் சேவை 8.30 மணிக்கு யாழ்.நோக்கி புறப்படும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த புதிய ரயில் சேவை குறித்த உறுதிப்படுத்தப்பட்ட அட்டவணை நாளை வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்