ரணிலின் பாதுகாப்பு அதிகாரியின் விபரீத முடிவு - சிதறிப் போன உடல்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுபாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த அதிகாரி வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தற்கொலை செய்ததாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த M.P.W. பெர்னாண்டோ என்ற பிரதமர் பாதுகாப்பு பிரிவில் சேவை செய்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மிரிகமவில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த ரயில் வெயங்கொடை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்து இருந்து மீண்டும் ரயில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதன் போது குறித்த நபர் ரயில் தண்டவாளத்தில் தனது தலையை வைத்துள்ளார். இதனால் தலை இரண்டாக பிரிந்து சென்றுள்ளது. இதன் போது ஒருவரும் அதனை அவதானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் வத்துப்பிட்ட மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்