பலாலியில் ஏற்படும் மாற்றம்! யாழிலிருந்து இந்தியா பறக்கவுள்ள விமானங்கள்


பலாலி விமான நிலையத்தை சர்வதேச வானூர்தித் தளமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இதற்கென 19.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன. முதல்கட்டமாக ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வதகவும் இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும்.

இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக இந்தியாவுக்கான விமான சேவை அடுத்த மாதம் (ஓகஸ்ட் மாதம்) ஆரம்பமாகும். இதற்கு உரிய விதத்தில் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, A320, A321 போன்ற பாரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளனமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துரையிடுக

0 கருத்துகள்