வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வேருக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்! உங்களிற்கு விருப்பமா?


நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்தது.

இந் நிலையில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்காக விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா விமான சேவையிடம் கோரியுள்ளார்.

அலரிமாளிகையில் அரசாங்கத்தின் வாராந்த அபிவிருத்தி கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, ஹர்ஷ டி சில்வா, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

இதன்போதே போதே விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்தன கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்கு விமான எரிபொருளின் கட்டணத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்