இந்தியா தோல்விக்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம்..! வெளியான திடுக் தகவல்

உலகக் கோப்பையில் இந்தியா அணி தோல்வியடைந்ததற்கு பிரித்தானியர்களின் சூழ்ச்சியே காரணம் என்பதை குறிப்பிடும் வகையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.


நியூசிலாந்து-இந்தியா மோதிய முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடந்தது. முதல் நாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மறுநாள் போட்டி தொடர்ந்து நடந்தது. இதில், இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இதுகுறித்து சுப்பரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியதாவது, கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி ஏன் லண்டனில் இருக்க வேண்டும்? வெள்ளைக்காரர், கடினமான சீனிவாசனை நீக்கிவிட்டு, எலும்பில்லாத அதிசய இந்தியரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளனர்.

 பிரித்தானியாவில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மழை பெய்யவில்லை என்றால் அதே நாளில் இந்தியா வென்றிருக்கும் என சுப்பரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்