ரோகித்சர்மாவுடன் பிரச்சனையா? இந்திய அணியில் என்ன நடக்கிறது? கோஹ்லி அளித்த ஒரே பதில்


இந்திய அணி வீரர்களுக்கிடையே மோதல் நிலவி வருதாக கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதற்கு கோஹ்லி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 3 டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான வீரர்கள் கோஹ்லி தலைமையில் அறிவிக்கப்பட்டனர். அதில் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது

அதுமட்டுமின்றி இந்திய அணிக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக கோஹ்லி மற்றும் ரோகித்சர்மாவிற்குமிடையே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று இரவு மும்பையில் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது.


பொதுவாக ஒவ்வொரு தொடருக்கு செல்வதற்கு முன்பு அணியின் தலைவர் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் மேற்கிந்திய தீவு தொடருக்கு முன்பு கோஹ்லி நிருபர்களை சந்திக்கமாட்டார் என்று முதலில் தகவல் வெளியானது.

ஏனெனில் அவருக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியானதால், இதுகுறித்த கேள்வியை தவிர்ப்பதற்காக அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அணி வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தால் இந்திய அணி முதலிடம் பிடித்து இருக்காது என்று கூறிய அவர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் காரணமாக டெஸ்ட் போட்டிகள் மேலும் பிரபலமடையும் என்று கூறி முடித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்