எனது நாட்டிற்காக தான் விளையாடுகிறேன்! மௌனம் கலைத்த ரோஹித் ஷர்மா


நான் எனது நாட்டிற்காக தான் விளையாடுகிறேன் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறியதில் இருந்து, கேப்டன் கோஹ்லி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது என தகவல்கள் வெளியானது.

அத்துடன் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை ரோஹித் நிறுத்தினார். இதுவும் ஊடகங்களில் இருவருக்கும் உள்ள மோதலை உறுதிபடுத்துவதாக செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கோஹ்லி, தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தான் எப்போதும் ரோஹித் ஷர்மாவை பாராட்டி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், சமூக வலைத்தள பக்கத்தில் அணி வீரர்களுடன் அவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்றில், ரோஹித் ஷர்மா இல்லாததை சுட்டிக்காட்டி சிலர் கேள்வி எழுப்பினர். அத்துடன் இந்த விவகாரத்தில் கோஹ்லி பொய் கூறுவதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்து வந்த ரோஹித் ஷர்மா, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், ‘நான் எனது அணிக்காக மட்டும் விளையாடவில்லை, எனது நாட்டிற்காகவும் தான் விளையாடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்