கோத்தபாயவுக்கு இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ள அமெரிக்கா! தப்பிக் கொள்வாரா?


ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சோபா மற்றும் எக்ஸா ஒப்பந்திற்காக தனது இணக்கத்தை வெளியிட்டால், கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தயக்கம் காட்டி வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அது பிற்போடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்கால ஜனாதிபதியின் அனுமதியுடன் இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், அன்று முதல் இந்த ஒப்பந்தம் செல்லும்படியாகும் என்ற இணக்கப்பாட்டிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் இணக்கப்பாட்டிற்கமைய அவரது குடியுரிமையை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ஊடகவியலாளர்களுடன் அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, கோத்தபாயவின் குடியுரிமையை எவ்வாறு நீக்குவது என்பது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்