பற்றியெரியும் அமேசான் காடு!!பற்றியெரியும் அமேசான் காடு!!

#உலகின்_மிகப்_பெரிய_உயிர்ப்_பெருந்திணிவும்_பூமியின்நுரையீரலாக_கருதப்படும்_
#அமேசான்_காடுகள்_பற்றி #எரிகிறது!!!

#அவற்றிற்கான_காரணம்?
#அவை_பற்றியதான_ஓர்பார்வை

#தென்_அமெரிக்காவில் உள்ள அமேசான் காடு கிட்டத்தட்ட 55 லட்ச சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. 6400 கிலோமீட்டர் நீளமுள்ள அமேசான் நதி இந்த காடுகள் வழியாக ஓடுகிறது. பல பிரதான விலங்குகள், தாவரங்கள், பூச்சிகள், மீன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த அமேசான் காடு. #உலகின்_20_சதவீத_ஒக்சிஜென் அமேசான் காடுகளில் இருந்து வெளிவருகிறது. மேலும் #பூமி_வெப்பமாகுதலை கட்டுப்படுத்திவதில் அமேசான் காடுகள் பெரும் பங்கு வகிகிறது.

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 #காட்டு_தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இந்த காட்டுத் தீ சம்பவத்திற்கு மக்களின் செயல்களே காரணம் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அமேசான் காடுகளில் பெரும் அளவில் ஏரியும் காட்டு தீ விபத்து சம்பவத்திற்கு, மக்கள் காட்டு பகுதியில் தங்களின் பயன்பாட்டிற்காக வைக்கும் தீயே பிரதான காரணம் என்று தெரியவந்துள்ளது. பொதுவாக இந்த பருவத்தில் காடுகளில் தீ பிடிப்பது இயல்பு என்றாலும் அமேசான் காட்டில் தீ பரவுவது சற்று கடினம் தான். எனினும் தற்போது மக்களின் செயல்பாடுகளால் காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் அதிகரித்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


#பிரேசில்_நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி அமேசான் காடுகளில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் 80 சதவிகிதம் அதிகமான காட்டு தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் அமேசான் காடுகள் கடந்த ஜூன் மாதத்தில், முந்தைய காலங்களை விட 88% #அதிகமாக_அழிக்கப்பட்டதாக இந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் தங்களின் நில தேவைக்காக அமேசான் காட்டில் தீ மூட்டியதும் காட்டு தீ அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல தற்போது இருக்கும் பிரேசில் அதிபர் போல்சோனாரோவின் வளர்ச்சி கொள்கைகளும், அமேசான் காட்டின் அழிவிற்கு ஒரு காரணமாக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் அதிபர் தேர்தலின் போது போல்சோனாரோ அமேசான் காடுகளில் உள்ள வளங்களை வைத்து பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தார். அவரின் இந்தக் கொள்கையினால் தற்போது அமேசான் காட்டின் அழிப்பு அதிகரித்துள்ளது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பிரேசில் நாட்டுக்கு உட்பட்ட அமேசான் காடுகள் பற்றி எரிகிறது. இதனால் பல தாவரங்கள், விலங்குகள் ஆகிவை தீயில் பரிதாபமாக எரிந்து உயிரிழந்துள்ளன. மேலும் இந்த காட்டுத்தீ பரவுவதால் பல்லாயிரம் ஹெக்டேர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. இந்த புகை அந்த பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 1700 மைல் தூரம் உள்ள #சான்_பாலோ வரை படர்ந்துள்ளது. இந்த காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும் அமேசான் காடுகள் அருகில் வசிக்கும் மக்களும் விவசாயிகளும் மரங்களை எரிப்பதால் இது பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.

2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு #மழைக்_காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகாமை கூறுகிறது.

பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் #சயீர்_பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலுல், அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என்றார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.

#World_Wildlife_Fund_For_Nature ' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, “ #பூமியின்_நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிகளவில் கார்பன் வாயு பரவ நேரிடும். இது பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்” என எச்சரித்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்