எப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா?..


தமிழ் சினிமாவின் 90ஸ் ஹேண்ட்ஸம் ஹீரோ பிரஷாந்த். 'டாப்ஸ்டார்' என தன் ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவரது முந்தைய பட்டப்பெயர் ஆணழகன்.

எக்கச்சக்கமான பெண் ரசிகைகளைக் கொண்ட இவர் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தவர்.

ஷங்கரின் இயக்கத்தில் இவர், ஜீன்ஸ் படம் மூலம் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் நடித்து உலகமெங்கும் வெற்றி கதாநாயகனாக ஜொலித்து வந்தார்.

இன்றைய தலைமுறையின் தல, தளபதியெல்லாம் அப்போது பிரசாந்த் என்ற நடிகருக்கு பின்வரிசையில் இருந்தவர்கள் என்றுக்கூட சொல்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

2000ம் ஆண்டுக்கு பின்னர் இடைவெளிவிட்ட பிரசாந்த் பொன்னர் சங்கர் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக வெளியான மம்பட்டியான் உள்ளிட்ட அவரது படங்கள் பெரிதாக ஹிட் அடிக்காததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பின், தெலுங்கில் ராம் சரண் தேஜா நடித்த 'வினய விதேய ராமா' படத்தில் அவரது அண்ணனாக பிரஷாந்த் தோன்றியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.

ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்த பிரசாந்துக்கு இந்த நிலைமையா என சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தையும் ரசிகர்கள் கொட்டித்தீர்த்தனர்.

தற்போது 50 ஆவது வயதை நெருங்கி கொண்டிருக்கும் இவர் 'ஜானி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் இது இவருடைய 49 ஆவது படம் ஆகும்.

சாக்லெட் பாய் பிரசாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்