220 கி.மீ வேகத்தில்... ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி சூறையாடிய டோரியன்கரீபியன் நாடுகளில் ஒன்றான பஹாமாஸை, 220 கி.மீ வேக காற்று, 20 அடி அலைகள் என சூறையாடிய டோரியன் சூறாவளி, தற்போது அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது.

டோரியன் சூறாவளி புளோரிடா மற்றும் தென் கரோலினாவை தாக்குவதற்கு முன்பு பஹாமாஸில் உள்ள அபாகோ தீவுகள் வழியாக சூறையாடி சென்றுள்ளது.

பஹாமாஸில் 220 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில். பஹாமாஸின் அபாகோ தீவுகளில் வீடுகள் சிதைந்து கிடப்பதைக் காட்டுகிறது, வெள்ள நீர் தெருக்களில் ஓடுகிறது.

5-ம் வகையான சூறாவளி என அறிவிக்கப்பட்டுள்ள டோரின், இரண்டாவது மிக சக்திவாய்ந்த அட்லாண்டிக் சூறாவளி ஆகும், இது புளோரிடாவை நோக்கிச் செல்வதற்கு முன் மற்றும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை தீவுகள் வழியாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபாகோ தீவுகளில் சாதாரண அளவை விட அலைகள் 18 முதல் 23 அடி அதிக அழிவுகரமான அலைகளைக் கொண்டுள்ளன என்று மியாமியை தளமாகக் கொண்ட அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.


ராயல் கடற்படை பஹாமாஸில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஆர்.எஃப்.ஏ மவுண்ட்ஸ் பே என்ற உதவி கப்பலை நிறுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளைச் சுற்றி கடைசியாகக் காணப்பட்ட இந்தக் கப்பல், பலவிதமான நிலத்திலும் நீரிலும் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டரைக் கொண்டு செல்வதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்