சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. கைவிரித்த நாசா


இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் 2 விண்கலனை அனுப்பியது. ஆனால் கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டர் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து கொண்டது. அதனைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள ‘ஹலோ விக்ரம்’ என குறுஞ்செய்தி அனுப்பி வைத்தது.

அத்துடன் ஏற்கனவே நாசா நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டரைக் கொண்டு, விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்வதாக தெரிவித்தது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை எனவும், சமிக்ஞை மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்