சந்திரயான்-2வின் லேண்டர் விக்ரமை படம்படிக்க சூப்பர் திட்டம்! தமிழர் சிவன் தலைமையிலான இஸ்ரோ அதிரடி



சந்திராயான் - 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க போட்டுள்ள திட்டம் குறித்து இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. ஆனால், நிலவுக்கு அருகே 2 கிலோ மீற்றர் தொலைவுக்கு சென்றபோது, அந்த லேண்டரின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

இதனால் விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை விக்ரம் இழந்தது.

இந்நிலையில், நிலவில் லேண்டர் விக்ரம் எங்கிருக்கிறது என்பது குறித்து துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இஸ்ரோவின் தலைவருமான சிவன் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க, ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50 கி.மீ. தூரமாக குறைக்க இஸ்ரோ திட்டம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்