திடீரென தடம்புரண்டது ரயில்: 50 க்கும் மேற்பட்டோர் ஸ்தலத்தில் சாவு; பலர் கவலைக்கிடம்!கொங்கோ நாட்டில் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் பலியாகியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவின் டாங்கான்கியா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டது.

தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் முதல் கட்டமாக 50 பேர் பலியாகினர் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அந்நாட்டு மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவ் பிகாயி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்