தென்னிலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்!ஆட்பதிவுத் திணைக்களத்தின் தென்மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

காலி, கடவத்-சத்தர பிரதேச செயலக வளவில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையை வழங்கும் ஒருநாள் சேவையை தென்மாகாண அலுவலகத்தின் ஊடாகவும் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

இலத்திரனியல் தேசிய அடையாளஅட்டை செயற்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் அமைந்துள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் தற்போது VPN தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதான அலுவலக தரவுக் கட்டமைப்புடன் இணைப்பை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இதுவரை காலமும் கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்தில் மாத்திரமே ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையை பெறும் நடைமுறை இருந்தது. இன்று முதல் தென்னிலங்கை மக்கள் காலி ஆட்பதிவு கிளை அலுவலத்திலும் தமக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்