இன்று ஓய்வு முடிவை அறிவிக்கிறாரா டோனி? வெளியான தகவலால் உச்சக்கட்ட டென்ஷனில் ரசிகர்கள்


இந்திய கிரிக்கெட் அணி விரர் டோனி இன்று செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அப்போது ஓய்வு குறித்து அறிவிப்பாரா என்ற கேள்வியெழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு தற்போது 38 வயதாகிறது.
இவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஆனால் சில கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் இன்று மாலை இந்திய நேரப்படி ஏழு மணிக்கு டோனி செய்தியாளர்களை சந்திக்கவுளார் என ஒரு தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து டோனி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பார் என கூறப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தான் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச போகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
இந்த செய்தி சமூகவலைதளங்ளில் வேகமாக பரவும் நிலையில் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்