கலைஞர் எங்கே.. கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்: இணையத்தில் வைரலாகும் சர்ச்சை போஸ்டர்


திமுக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஓட்டப்பட்டடிருந்து போஸ்டரில் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1949 ஆம் ஆண்டு அண்ணாவால் தொடங்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். பல்லாண்டுகளாக ஒரு மாபெரும் திராவிட கட்சியின் தலைவராக இருந்தவர் கருணாநிதி. அதைவிட அதிசயம், 60 ஆண்டு காலமாக அவரது சட்டமன்றப்பணி தொடர்ந்தது. அத்தகைய ஆளுமையைப் பெற்றவர் கலைஞர் கருணாநிதி.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்7ம் திகதி 94 வயதில் காலமானார். கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். கருணாநிதி மறைவை தொடர்ந்து தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், இன்று செப்டம்பர் 5ம் திகதி பிறந்தநாள் காணும் வேலூர் கிழக்குமாவட்ட செயலாளர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி. எம்எல்ஏ-வை வாழ்த்தி போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் பெரியார், திமுக-வை தொடங்கிய அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி புகைப்படங்கள் இடம்பெறவில்லை.

இது திமுக தொண்டர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் கருணாநிதி புகைப்படம் இடம்பெறாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்