வாட்ஸ்ஆப் பயனர்களை உளவு பார்க்க முயற்சிக்கும் இந்திய அரசு: பேஸ்புக்கின் முடிவு என்ன தெரியுமா?


முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் நிறவனத்தினால் நிர்வகிக்கப்படும் மெசேஜ் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் விளங்குகின்றது.

இவ் வாட்ஸ் ஆப் செயலியின் ஊடாக பல்வேறு போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதனால் உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றது.

எனினும் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாகும்.

எனவே வாட்ஸ் ஆப் பயனர்களை வேவு பார்க்க இந்திய அரசு எத்தனித்து வருகின்றது.

ஆனால் இதனை அனுமதிப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் தற்போதுவரை தயாராக இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த Clegg என்பவர் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவால், தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் மற்றும் வணிகத்துறை அமைச்சராக பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது பேஸ்புக் நிறுவனம் தீர்வுகளை தருவதற்கே விரும்புகின்றது என்றும் அது பிரச்னைகளை உருவாக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்